நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக கட்சியின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கடந்த 2016-ம் ஆண்டு ரிவபா சோலங்கி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு நித்யான என்கிற பெண் குழந்தை ஒன்று உள்ளது.

அரசியல் ஆர்வம் கொண்ட ரிவபா, நேற்றைய தினம் பூனம் என்ற பா.ஜ.க எம்.பி முன்னிலையில் கட்சியில் இணைந்தார், அதன்பிறகு பேசிய அவர், பிரதமர் மோடியே எனக்கு உந்துசக்தி. அதனால்தான் பா.ஜ.க.வில் இணைகிறேன். தனியாக என்னால் எந்த மக்கள் சேவைகளையும் செய்ய முடியாது. அதே நேரம் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளதன் மூலம் சிறந்த மக்கள் சேவையை அளிக்க முடியும்.

என் முதல் இலக்கு பெண்களுக்கு அதிகாரம் பெற்று தர வேண்டும் என்பதுதான். என்னுடைய தற்போதைய எண்ணம், கட்சிக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு உழைக்க வேண்டும் என்பது மட்டும் தான். இதை தவிர இந்த மேடையில் பேசுவதற்கு இல்லை என கூறினார். இதனையடுத்து அவருக்கு ஜாம் நகரின் முக்கிய கட்சி பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஜாம் நகரில் அதிகம் அறியப்பட்ட முகம் ரிவபா என்பதால், பாஜக சார்பில் அவரை தேர்தலில் நிற்க வைக்கலாம் என்ற பேச்சு நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு விபத்து ஏற்படுத்திய ரிவபா, விசாரணை மேற்கொண்ட பொலிஸாரை கன்னத்தில் அறைந்து பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்