இரண்டு ஆண்டுகள் தடையை ஏற்றுக் கொள்கிறேன்.. இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா உருக்கம்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.சி.சி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக் கொள்கிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி ஊழல் தடுப்பு அமைப்பினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரது கைப்பேசியை கேட்டுள்ளனர்.

ஆனால், அதற்கு ஜெயசூர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். ஐ.சி.சி ஊழல் தடுப்பு விதிமுறைகளின் படி எந்த ஒரு வீரர், பயிற்சியாளர், சந்தேகம் எழும் எந்த ஒரு கிரிக்கெட் தொடர்பான நிர்வாகி, நபர்களிடத்தில் தொலைபேசி அழைப்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள் ஆகியவற்றை கேட்டால் உடனடியாக கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுக்காமல் மறுத்தால் ஐ.சி.சி-யின் நடவடிக்கை பாயும். இதன் அடிப்படையில் விசாரணையை தாமதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுதல், ஆதாரங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சனத் ஜெயசூர்யா மீது வைக்கப்பட்டது.

AFP

அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக ஜெயசூர்யாவுக்கு ஐ.சி.சி 2 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தான் எந்தவித ஊழல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, ஆனால் கிரிக்கெட் மீதான நேயத்திற்காக 2 ஆண்டுகள் தடையை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘நாம் அனைத்து தகவல்களையும் அளித்தேன். ஆனாலும் எந்த வித ஊழல் குற்றச்சாட்டுகளோ, உள்தகவலைப் பரிமாறியதாகவோ எந்த வித குற்றச்சாட்டுகளும் என் மீது இல்லை.

குற்றச்சாட்டுகளை ஏன் ஏற்றுக் கொண்டேன் என்றால் கிரிக்கெட் ஆட்டத்தின் நேர்மையைக் காக்கவே. என் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் உயர்ந்தபட்ச நேர்மையைக் கடைபிடித்து ஆடி வந்துள்ளேன். நான் எப்போதும் நாட்டுக்குதான் முன்னுரிமை அளிக்கிறேன். எனது இந்த தன்மைக்கு கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்களே சாட்சி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers