இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர், உலகக்கிண்ணம் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதக் கூடாது என வெளிவரும் செய்திகள் குறித்து தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.

இந்தியாவில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் வேண்டாம் என பெரும்பாலான மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதில் ஒருபகுதியாக திரைப்படத்துறையினர் இனி பாகிஸ்தான் கலைஞர்களுடன் இணைந்து செயல்படுவதில்லை என உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக் கூடாது எனவும், எதிர்வரும் உலகக் கிண்ணம் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிக்க வேண்டும் எனவும் கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துகளை முன்வைத்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் அக்தர் வெளியிட்ட கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் தொடர் நடைபெற்றால் குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மற்றும் பிசிசிஐ தான் அதிக லாபம் அடைவார்கள் என கூறும் அக்தர்,

அந்த தொடரில் சுமார் 600 மில்லியன் டொலர் அளவுக்கு வருமானம் ஈட்டப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்திய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது என பேசி வருவதை விமர்சித்துள்ள அக்தர்,

கிரிக்கெட் வீரர்கள் இணைப்புப் பாலமாகவே இருக்க வேண்டும். இந்த சூழலை மோசமாக்கும் வகையில் பேசக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்