பாகிஸ்தான் அணியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது.. மாறாக.. கவாஸ்கர் கூறும் யோசனை!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலக கிண்ணம் போட்டியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியினை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சுனில் கவாஸ்கர் யோசனை கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, அசாருதீன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும், உலகக்கிண்ணம் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாட கூடாது என கடுமையாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணிக்கெதிராக விளையாடினால் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர்களுடன் விளையாடி வெற்றி பெற்றால் நமக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். ஆனால் விளையாடாமல் போனால் அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் அதிகரிக்கும்.

இந்திய அரசு என்ன விரும்பினாலும், என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று அரசு முடிவு செய்தால், நான் அந்த முடிவுக்கு ஒத்துழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், உலகக்கிண்ணம் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்தால் அதனை ஐசிசி நிராகரித்து விடும். ஏனென்றால் இது இரு நாடுகளும் இடைப்பட்ட விடயம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers