புல்வாமா தாக்குதல் பிரச்சனை.. உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னணி வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்த நிலையில், உலகத்தலைவர்கள் உட்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவர் மட்டுமின்றி அசாரூதீன், ஹர்பஜன் சிங் போன்றோரும் விளையாடக் கூடாது என்று கூறி வருவதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரை நடத்தும் டைரக்டர் ஸ்டீவ் எல்வர்தி கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை தொடர் ஜுன் மாதம் 16-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்டை பெறுவதற்கு 400,000 விண்ணப்பங்கள் வந்தன. ஆனால் போட்டி நடைபெறும் ஓல்டு டிராப்பர்டு மைதானம் 25,000 பேரை மட்டுமே உள்ளடக்கும் மைதானம் ஆகும்.

இதிலிருந்தே தெரிகிறது, இந்தியா-பாகிஸ்தான் போட்டி எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்