டோனியை பார்த்தவுடன் கதறி அழுத குழந்தை! வேண்டாம் என்று விலகிச் சென்ற வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியைப் பார்த்து குட்டிக் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணி, மீண்டும் அதே அவுஸ்திரேலியா அணியுடன் உள்ளூரில் இரண்டு டி20 போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி வரும் 24-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி நேரம் கிடைக்கும் போது எல்லாம், தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியில் சென்ற இவர், குழந்தை ஒன்றை தன்னிடம் வரும் படி கூற, அதற்கு அந்த குழந்தை அழுததால், டோனி வேண்டாம் அழுகிறாள் என்று கூறி தூக்காமலே சென்றார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers