விமானத்துடன் மாயமான பிரபல கால்பந்து வீரரின் உடல் மீட்பு? கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

அர்ஜென்டினா நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலாவின் உடல் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, கடந்த 21 ஆம் திகதி வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் பகுதிக்கு குட்டி விமானம் ஒன்றில் சென்றுள்ளார்.

ஆனால் திடீரென்று விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்துள்ளதுடன், விமானம் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஞாயிறன்று, விமானம் மாயமானதன் இரு வாரங்களுக்கு பின்னர், மீட்பு குழுவினர் கடலுக்கடியில் சிக்கியிருந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் விபத்துக்குள்ளான விமானத்தின் ஒருபகுதியை கண்டுபிடித்துள்ளதாக கூறும் மீட்பு குழுவினர்,

அதில் உடல் ஒன்று சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அது விமானியின் உடலா அல்லது கால்பந்து நட்சத்திரம் சாலாவின் உடலா என்பது தொடர்பில் எந்த தகவலும் உறுதிப்படுத்தவில்லை.

மட்டுமின்றி சோனார் கருவிகளின் துணையுடனே விமானத்தின் ஒருபகுதியையும், அதில் உடல் ஒன்று சிக்கியிருப்பதையும் மீட்பு குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

ஆனால் அந்த விமான பாகங்களை மீட்கும் நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னரே கண்டறியப்பட்டுள்ள அந்த உடல் தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers