ஏய் கருப்பனே என நிறவெறி காட்டிய பாகிஸ்தான் கேப்டன்: தடைக்கு பின் கூறிய கருத்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

நிறவெறி சர்ச்சையினால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், தனது உலகக் கோப்பை கேப்டன் பதவிக்கு ஆபத்தாக அந்த தடை இருக்காது என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

டர்பனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்பிராஸ் அகமது, தென் ஆப்பிரிக்க வீரர் பெலுக்வாயோ குறித்து நிறவெறியை தூண்டும் வகையில் பேசியது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது.

இந்த விடயம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக ஐ.சி.சி அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது. எனவே, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிகளிலும், தற்போது நடைபெற்று வரும் இரண்டு டி20 போட்டிகளிலும் சர்ப்பிராஸ் அகமது பங்கேற்கவில்லை.

இந்நிலையில், தடை குறித்து சர்ப்பிராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘நான் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பேன். என்றாலும், முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் எடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் அணி சர்ப்பராஸின் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...