போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியை ஓட ஓட விரட்டிய சஹால்: வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டி முடிந்ததும், சுழற்பந்து வீச்சாளர் சஹால் டோனியை விரட்டி கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று பெருமை சேர்த்துள்ளது.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற 5 வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 217 ரன்களை மட்டுமே குவித்தனர்.

இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், தன்னுடைய சஹால் டிவிக்கு பேட்டி எடுப்பதற்காக டோனியை அழைத்தார். ஆனால் டோனி அதிலிருந்து தப்பிக்க வேகமாக மைதானத்தை விட்டு ஓடி சென்றார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்