இந்திய அணியால் ஆபத்து: நியூசிலாந்து பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை தகவல்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுவதை போல, இந்திய அணியின் புகைப்படத்தை பதிவிட்டு நியூசிலாந்து பொலிசார் நகைச்சுவையாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நேப்பியரில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்திலும், மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

மூன்றாவது போட்டியும் மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெரும் முனைப்புடன் நியூசிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் நியூசிலாந்தின் கிழக்கு மாவட்ட பொலிஸார் தங்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளனர்.

அதில், "நமது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பயங்கரமான குழு பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க காவல்துறை விரும்புகிறது. கடந்த வாரம் இந்தக் குழு, நேப்பியர் மற்றும் மான்கனுயீ ஆகிய இடங்களில் அப்பாவி நியூசிலாந்து மக்கள் மீது மோசமான தாக்குதலை நடத்தியது. கிரிக்கெட் பேட் அல்லது பந்தைப் போன்றவற்றை கையில் எடுத்தால் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என நகைச்சுவையாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்