சிறைத்தண்டனையிலிருந்து தப்பிய கால்பந்து ஜாம்பவான்: எத்தனை மில்லியன் அபராதம் தெரியுமா?

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த வழக்கில், 23 மாத சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் செலுத்துவதாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்புக்கொண்டுள்ளார்.

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2011 முதல் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

ஸ்பெயின் அரசு தொடர்ந்த வழக்கில், ரொனால்டோ வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 23 மாதம் சிறைத்தண்டனை அல்லது £16.9 மில்லியன் பவுண்டுகளை அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு நடைபெற்று வந்த மாட்ரிட் நீதிமன்றத்தில் தன்னுடைய காதலியுடன் ஆஜரான ரொனால்டோ, £16.9 மில்லியனை அபராதமாக செலுத்திகிறேன் என ஒப்புக்கொண்டார். இதன்மூலம் தற்போது அவர் சிறைதண்டனையிலிருந்து தப்பியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்