கறுப்பு நிற பொம்மை: ஒரு தாயாக உலக மக்களின் மனதை வென்ற செரினா வில்லியம்ஸ்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

டென்னிஸ் விளையாட்டில் அதிரடி ஆட்டக்காரரான செரினா வில்லியம்ஸ் தனது குழந்தைக்கு வாங்கி கொடுத்த கறுப்பு நிற பொம்மை அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது.

2017 -ம் ஆண்டில் செரினாவுக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா என்ற குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது மகளுக்குப் பரிசளித்த கறுப்பு நிற `குவாய் குவாய்’ (Qai Qai) பொம்மை குறித்து பகிர்ந்துள்ளார் செரினா.

எனது மகளுக்கு நான் வாங்கிக் கொடுக்கும் முதல் பொம்மை கறுப்பு நிற பொம்மையாகத்தான் இருக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்திருந்தேன்.

நான் கறுப்பு நிற பொம்மைகளை அதிகம் பார்த்ததில்லை.

அவள் கறுப்பு மற்றும் கெளகாசியன் கலப்பு. அவள் கைகளில் கிடைக்கும் முதல் பொம்மை கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவளது இரண்டாவது பொம்மை வெள்ளை நிறத்தில் இருக்கும். அனைவரையும் நேசிக்க வேண்டும்.

அவர்கள் என்ன நிறம் என்று பார்க்க கூடாது. நிறங்களைத் தவிர்த்து மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் அவளுக்குக் கறுப்பு நிற `குவாய் குவாய்’ பொம்மையை வாங்கிக் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

தாயாக நீங்கள் எங்களின் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers