சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு: 14 நாட்களுக்குள் நிரூபிக்க இந்திய வீரருக்கு உத்தரவு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அம்பத்தி ராயுடு சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் போது இந்திய அணியை சேர்ந்த 33 வயதான சுழற்பந்துவீச்சாளர் அம்பத்தி ராயுடு 2 ஓவர்கள் வீசி 13 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இந்த நிலையில் அவருடைய பந்து வீச்சு டெஸ்ட், ஒருநாள், மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அறிவிக்கப்பட்ட சட்டவிரோத பந்துவீச்சு விதிகளுக்கு கீழ் வருவதாக தெரியவந்துள்ளது.

இதனால் 14 நாட்களுக்கு அவர் சோதனைக்கு செல்ல வேண்டும் எனவும், அதன் அறிக்கை வரும் வரை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் அவர் பந்து வீசலாம் எனவும் ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers