டோனியின் ஆமை வேக ஆட்டம்: கடுமையாக தாக்கி பேசிய முன்னாள் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டோனியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய அணி, நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தது.

இதில் சிறப்பாக பந்து வீசிய அவுஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆரம்பத்திலே மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணற ஆரம்பித்தது.

அந்த சமயத்தில் களமிறங்கிய டோனி, ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

ஆரம்பத்தில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பொறுமையாக விளையாடிய டோனி, 96 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இது கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருந்த நிலையில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள முன்னாள் இந்திய வீரர் அஜித் அகார்கர், டோனியின் ஆட்டம் பற்றி பேசியுள்ளார்.

அதில், 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருப்பது என்பது கடுமையான ஒரு சூழ்நிலை தான். அதனால் களத்தில் தன்னை நிலைப்படுத்தி கொள்ள 25 முதல் 30 பந்துகள் வரை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் 50 ரன்களுக்கு 100 பந்துகள் எடுத்துக்கொண்டது அதிகம். இது ரோஹித் சர்மாவிற்கு எந்த விதத்திலும் உதவவில்லை.

ரோஹித் சர்மா ஒருவரால் 288 ரன்களை விரட்ட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒருநாள் போட்டியில் 100 பந்துகள் என்பது அதிகமான ஒன்று.

உங்கள் மீது அழுத்தம் அதிகரிப்பதை தவிர்க்க ஆரம்பத்தில் சில பந்துகளை வீணடிக்கலாம். ஆனால் அதேசமயம் அணிக்கு என்ன தேவையோ அதை செய்வது முக்கியம். அப்படி இல்லையென்றால் விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிட்டு சென்றுவிடலாம் என பேசியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers