பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை கூறிய இந்திய வீரர்கள்: கொந்தளித்த ஹர்பஜன் சிங்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பெண்கள் பற்றி இழிவான கருத்துக்களை கூறிய இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது தான் என ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பாலியல் உறவு பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இருவரும் வெளிப்படையாக பதிலளித்திருந்தனர். இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வீரர்கள் இருவருக்கும் எதிராக கடும் கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன.

உடனே இருவரையும் இடைநீக்கம் செய்த இந்திய கிரிக்கெட் வாரியம், அவுஸ்திரேலிய சுற்றுலாவிலிருந்து நாடு திரும்புமாறும் அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், இருவரும் செய்தது பெரும் தவறு.

இவர்கள் இப்படி பேசியதால் பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் ஹர்பஜன், கும்ப்ளே, சச்சின் எல்லாருமே இப்படிப்பட்டவர்கள் தானா என்ற தவறான எண்ணம் தோன்றும்.

இவர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என பேசியுள்ளார்.

மேலும் பேசுகையில், 'நான் என் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் இடத்தில் இவர்களை அனுமதிக்கமாட்டேன். ஒரே பேருந்தில் இவர்களோடு என் குடும்பத்தினர் பயணிக்க வேண்டும் என்றால் அதனை செய்ய மாட்டேன். பெண்களை பற்றிய இவர்களது பார்வை தவறு" என கடுமையாக விமர்சித்துள்ளார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers