பாண்டியா- ராகுலின் ஆபாச கருத்து சர்ச்சை: கேப்டன் கோஹ்லி கூறியது என்ன?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா- ராகுல் இருவரும் டி.வி நிகழ்ச்சியில் கூறிய சர்ச்சை கருத்து தொடர்பாக கேப்டன் கோஹ்லி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாண்டியா- ராகுல் இருவரும் பெண்கள் குறித்து ஆபாச கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாண்டியா ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.

எனினும், இருவருக்கும் 2 போட்டிகளில் தடை விதிப்பது குறித்து பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இறுதி அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

AFP

இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

’நாங்கள் ஒரு கிரிக்கெட் அணியாகவும், பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்களாகவும் அந்த கருத்தை ஏற்கவில்லை. அது அவர்கள் இருவரின் தனிப்பட்ட கருத்து. அணி நிர்வாகத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்த சர்ச்சை எங்கள் நம்பிக்கையைக் குலைக்காது. கிரிக்கெட் வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து, முதல் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடைபெறும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்