செல்ல மகளின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட ரோஹித் சர்மா

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தனது செல்ல மகளின் முதல் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2018ம் ஆண்டின் இறுதி நாள் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு மகிழ்ச்சியானதாகவே அமைந்தது. தனக்கு பெண் குழந்தை பிறந்ததே அவரின் மகிழ்ச்சிக்கு காரணம்.

ரோஹித் சர்மா, ரித்திகா என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கு எப்போதும் மனைவியை அழைத்துச் செலவதை வழக்கமாக கொண்டிருந்தார் ரோஹித். இவர்களின் ரொமான்ஸ் இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான ஒன்றும் கூட.

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரித்திகா டிசம்பர் 30 ஆம் திகதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

தான் அப்பாவாக ஆனதை அடுத்து அவுஸ்திரேலியா தொடரில் விளையாடிக்கொண்டிருந்த ரோஹித், மும்பைக்கு விரைந்தார்.

ரோஹித் அப்பா ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ''உலகுக்கு ஹலோ... 2019 சிறப்பாக அமையும்'' என பதிவிட்டு தன்னுடைய மகளின் புகைப்படத்தை ரோஹித் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெரியாவிட்டாலும், குழந்தையின் பிஞ்சு விரல்கள் தனது பெற்றோரின் விரல்களை அழகாக பற்றியிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers