கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு: பரிதாபமாக உயிரிழந்த வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ரயில்வே ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டு வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி போபாலில் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டீசல் ஷீல்ட் லெவன் மற்றும் எலெக்ட்ரிகல் லெவன் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. போட்டிக்கு பின்னர் வீரர்கள் மைதானத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்போது அரவிந்த் ஹோடியா என்ற வீரருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு நெஞ்சுவலிப்பதாக சக வீரர்களிடம் தெரிவித்துள்ளார். ரயில்வே மைதானத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அவரை 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த காலமானார். மாரடைப்பின் காரணமாக அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியைச் சேர்ந்த நிர்வாகி மனோஜ் ராய்க்வார் கூறுகையில், போட்டி முடிந்த பிறகு நாங்கள் அனைவரும் ஓய்வு எடுத்து போது அரவிந்த தனக்கு நெஞ்சு வலிக்கிறது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். அவருக்கு எதனால் வலி ஏற்பட்டது என்பது குறித்து தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers