2019 ஐபிஎல் திருவிழா: அணி மாறும் முக்கிய வீரர்கள்: ஏல திகதி அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

2019-க்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஏலம் வரும் 18 ஆம் திகதி ஜெய்பூரில் நடக்கும் நிலையில் முன்னணி வீரர்கள் பலர் அணி மாறவுள்ளனர்.

ஐபிஎல் எனப்படும் இந்திய பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் வெளி நாட்டு வீரர்களும் பங்குபெற்று விளையாடி வருகிறார்கள். இந்த தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்படுவதால், சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு கோடிகளில் ரூபாய் கொட்டுகிறது.

இந்நிலையில் 2019-ம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கின்றனர்.

இந்த ஏலத்தில் பல வீரர்கள் அணி மாறிவிட்டனர். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக் விடுவிக்கப்பட்டு, அவர் மும்பை இண்டியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் இருந்த அகிலா தனஞ்செயா, முஸ்தபிஷூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது.

அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம். டெல்லி அணி, கவுதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது. சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது.

இதே போல மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்