என்னையும் இப்படிதான் செய்தார்கள்! வெளிப்படையாக கூறிய கங்குலி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தன்னையும் நல்ல ஃபார்மில் இருக்கும்போதே அணியில் சேர்க்காமல் அமர வைத்தார்கள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில், இரண்டு அரைசதங்கள் விளாசிய மிதாலிராஜ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, மிதாலி ராஜை அணியில் இருந்து நீக்கியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

மேலும் இந்த விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, தானும் இதேபோல் ஃபார்மில் இருந்தபோது அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘மகளிர் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. இது நடப்பதுதான். நானும் கேப்டன் பதவிக்குப் பிறகு உட்கார வைக்கப்பட்டேன்.

மிதாலி ராஜ் உட்கார வைக்கப்பட்டதைப் பார்த்ததும் ‘Welcome to the Group' என்று சொல்லிக்கொண்டேன். கேப்டன்களை இப்படி உட்காரச் சொல்வது நடக்கிறது. அதை செய்துவிட்டு போவோம். பைசலாபாத்தில் என்னை இப்படி உட்கார வைத்தார்கள்.

அப்போது ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தாலும், 15 மாதங்களாக நான் ஆடவே இல்லை.

வாழ்க்கையில் இப்படியும் நடக்கும். மிகச் சிறந்தவர்களுக்கு சில வேளைகளில் கதவு காட்டப்படும். மிதாலி ராஜுக்கு முடிவு அல்ல, அவரது பயணம் இதோடு முடிந்துவிடாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers