அவுஸ்திரேலிய மைதானத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழர்கள்! குவியும் பாராட்டுக்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் மைதானத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கோரிக்கை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது கஜா புயலாக மாறி, தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகள் அனைத்தையும் சிதைத்து போட்டது.

இதில் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு, தோட்டம் மற்றும் வளர்ப்பு உயிரினங்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் தாக்கி 11 நாட்களை தாண்டியும் கூட, இன்னும் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கிய நிலையில் அதிக கிராமங்கள் பசியில் தந்தளித்து வருகின்றனர்.

அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தன்னார்வலர்கள் பலரும் களத்திற்கு சென்று அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில், இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 வது டி20 போட்டியில், தமிழக இளைஞர்கள் 4 பேர் பதாகைகளை ஏந்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

“Save Delta, Save Tamil Nadu Farmers, Gaja Cyclone Relief” போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக உதவி கேட்டுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers