மகளுடன் தமிழில் கொஞ்சி பேசும் டோனி: இணையத்தில் வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மகள் ஷிவாவுடன் தமிழில் கொஞ்சி பேசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திர சிங் டோனிக்கு அவுஸ்திரேலியா தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளூரில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் டோனி, அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

குடும்பத்துடன் நேரம் செலவிடும் பொழுதெல்லாம், மகளுடன் இருக்கும் ஏதேனும் ஒரு வீடியோவை பதிவிட்டு இணையத்தை ஆக்கிரமிப்பது வழக்கம்.

அந்த வகையில் தன்னுடைய மகள், ஷிவாவுடன் டோனி தமிழில் கொஞ்சி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், `Greetings in Two languages' என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ``எப்படி இருக்கீங்க?’ என ஸிவா கொஞ்சும் தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என தோனி தமிழில் அழகாக பதிலளிக்கிறார்.

தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்