மூன்று குழந்தைகளுக்கு தாயார்: குத்துச் சண்டையில் 6-வது தங்கம் வென்று சாதனை

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

டெல்லியில் நடைபெற்ற மகளிர் உலகக்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 6வது முறையாக தங்கம் வென்று தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கே.டி.ஜாதவ் உள்ளரங்கத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஹனா ஒகோட்டாவை 5-0 என்று பிளாங்க் செய்து வென்றதன் மூலம் 6 முறை உலகக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றை நிகழ்த்தினார் மேர் கோம்.

கடந்த 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்குத்துச் சண்டையில் தங்கம் வென்றிருந்தார் மேரி கோம். இது 6வது முறை.

அயர்லாந்தின் கேட்டி டெய்லர் 5 முறை தங்கம் வென்ற சாதனையை உடைத்தார் மேரி கோம். 2001-ல் வெள்ளி வென்றதன் மூலம் 7 பதக்கங்களை வென்ற வீராங்கனையுமானார் மேரி கோம்.

ஆடவர் பிரிவில் கியூபாவின் பெலிக்ஸ் சேவன் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளர், அவருடன் தற்போது மேரி கோம் இணைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று வடகொரியாவின் கிம் ஹியாங் மி என்பவரை இதேபோல் 5-0 என்று பிளாங்க் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்