இலங்கை கிரிக்கெட் அணி அடுத்து மோத போவது யாருடன்? வெளியான அட்டவணை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணி டிசம்பர் 4-ஆம் திகதி நியூசிலாந்துக்கு பயணிக்கவுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 15-ஆம் திகதி தொடங்குகிறது.

அதன்படி டிசம்பர் 15ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டியும், 26ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.

2019ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டியும், 5ஆம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், 8ஆம் திகதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் ஜனவரி 11ஆம் திகதி ஒரு டி20 போட்டி நடக்கிறது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 4ஆம் திகதி நியூசிலாந்துக்கு புறப்படுகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்