சென்னையில் இன்று நடக்கும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி: நடந்த அதிரடி மாற்றம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் இன்று இந்திய அணி பங்கேற்கும் போட்டி நடைபெறும் நிலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 போட்டி நடைபெறவுள்ளது.

இதன் காரணமாக சேப்பாக்கம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை போக்குவரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது பல முக்கிய சாலைகள் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

போட்டியை காண வாகன நிறுத்த அனுமதி சீட்டு இல்லாமல் வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை உட்புறச்சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்