உணர்வுபூர்வமாக இருந்தது: தோல்விக்கு பின்னர் கலங்கிய இலங்கை அணித்தலைவர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பின்னர் அது குறித்து இலங்கை அணியின் தலைவர் சண்டிமால் பேசியுள்ளார்.

இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்த நிலையில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணித்தலைவர் தினேஷ் சண்டிமால், எங்களது பேட்டிங் மோசமாக இருந்தது. இது போன்று பேட்டிங் செய்தால், வெற்றி வாய்ப்பு கிடைக்காது. எல்லா சிறப்பும் இங்கிலாந்து வீரர்களையே சாரும்.

அவர்களது விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்த கடுமையாக முயன்றும் பலன் கிட்டவில்லை. அவர்கள் எல்லா வகையிலும் எங்களை வீழ்த்தி விட்டனர். இலங்கை கிரிக்கெட்டுக்கு ஹெராத் எந்த அளவுக்கு பங்களிப்பை அளித்திருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம்.

இது மிகவும் உணர்வுபூர்வமான நாளாக அமைந்தது. ஆனால் அவரை வெற்றியுடன் வழியனுப்ப முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்