கையில் குழந்தையுடன் சானியா மிர்சா: வெளியான புகைப்படங்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஐதராபாத்தில் உள்ள மருத்துவனையில் இருந்து கையில் குழந்தையுடன் சானியா மிர்ஸா வெளியில் வரும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா கடந்த ஏப்ரல் 12, 2010 அன்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர மட்டையாளர் சோயப் மாலிக்கை ஐதராபாத்தில் திருமணம் செய்தார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 30ம் தேதியன்று ஐதராபாத் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "இஸான் மிர்ஸா மாலிக்" என பெயர் சூட்டினார். இஸான் என்றால் "கடவுளின் பரிசு" என்பது பொருள்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து சானியா மிர்ஸா கையில் குழந்தையுடன் வெளியில் வரும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்