ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை மொத்தமாக ஆக்கிரமித்த இந்திய வீரர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் ஏற்கனவே முதலிடத்தில் இருந்த விராட் கோஹ்லி மேலும் 15 புள்ளிகள் அதிகம் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அதே போல் பவுலர்கள் தரவரிசையில் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், ரசித் கான் 2வது இடத்திலும், குல்தீப் யாதவ் 3வது இடத்திலும் உள்ளனர்.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 2வது இடத்திலும், ஜோ ரூட் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்