உணவில் மாட்டிறைச்சி வேண்டாம்: இந்திய கிரிக்கெட் அணிக்காக வைக்கப்பட்ட கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய வீரர்களுக்கான உணவில் மாட்டிறைச்சி வேண்டாம் என கிரிக்கெட் அவுஸ்திரேலியாவிடம் பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி மூன்று டி 20, நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நவம்பர் 21 முதல் ஜனவரி 18-ம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.

இது தொடர்பான இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வீரர்களுக்கான உணவு, தங்குமிடம் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதனிடையே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது வீரர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்பட்டது. இது பி.சி.சி.ஐ-க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது இந்திய வீரர்களின் மெனுவில் மாட்டிறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துக்கு பி.சி.சி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சைவ உணவுகளை பட்டியலில் அதிகரிக்க வேண்டும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்