இலங்கை தொடரால் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சரியாக விளையாடாத வீரர்களுக்கு, உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து அணியில் இடம் இல்லை என பயிற்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. எனினும், கடைசி போட்டியில் இலங்கை அணியிடம் படுதோல்வியை சந்தித்தது.

இலங்கை அணி நிர்ணயித்த 367 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணிக்கு, மழை பெய்ததால் 26.1 ஓவரில் 352 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டது.

எனினும், இங்கிலாந்து அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை அணி 219 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30ஆம் திகதி, உலகக் கிண்ண ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களை தயார் படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து வீரர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறுகையில், ‘இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால், உலகக் கிண்ண அணியில் இருக்கமாட்டார்கள்’ என எச்சரித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்