விராட் கோஹ்லி மனிதரே இல்லை: வங்கதேச வீரர் கருத்து

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை, வங்கதேச வீரர் தமிம் இக்பால் வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

விராட் கோஹ்லி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இதன்மூலம், அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் எனும் சாதனையை படைத்தார்.

மேலும், பல சாதனைகளை கோஹ்லி முறியடித்துள்ளார். இந்நிலையில், கோஹ்லியின் சாதனை குறித்து வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் தமிம் இக்பால் கூறுகையில்,

‘அவர் செயல்படுவதை பார்த்து, சில சமயம் அவர் மனிதரே இல்லை என எனக்கு தோன்றும். அவர் பேட்டிங் செய்ய வரும் போது, அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பாரோ என தோன்றும்.

அவர் தன்னை மேம்படுத்திக் கொள்வதிலும், தன் திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் நம்ப முடியாத அளவு செயல்படுகிறார். பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியவர்களில் கோஹ்லியும் ஒருவர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த 12 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் அருமையாக செயல்பட்டு வரும் அனைத்து சிறந்த வீரர்களையும் நான் பார்த்துவிட்டேன். அவர்கள் அனைவருக்கும் ஒரு பலம் உண்டு. ஆனால், யாரும் விராட் அளவுக்கு இந்த விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி நான் பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Getty Images

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்