பந்து வீசும்போது ரத்த வாந்தியால் அவதி: அவுஸ்திரேலிய வீரருக்கு அபூர்வ நோய்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 29 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளிலும் களம் கண்ட பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அபூர்வ நோயால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டே வாழ்க்கை எனவும் அது இல்லாமல் வேறு வாழ்க்கை தமக்கில்லை எனவும் உறுதிபட தெரிவித்தவர் ஹேஸ்டிங்ஸ்.

32 வயதான ஹேஸ்டிங்ஸ் தமக்கு அபூர்வ நோய் இருப்பதாக கூறி தாமே ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 4 மாதங்களாக பந்து வீச முயற்சிக்கும் போது தமக்கு கடுமையான இருமல் ஏற்படுவதாகவும், தொடர்ந்து ரத்த வாந்தி எடுப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார் ஹேஸ்டிங்ஸ். கடந்த சில ஆண்டுகளாக இந்த நோய் தம்மை அலட்டி வருவதாகவும் ஆனால் சமீப காலமாகவே அதன் தாக்கம் கடுமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் தொடரவே தாம் விரும்புவதாகவும், ஆனால் காலம் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தால் மீண்டும் களத்தில் இறங்கவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோயின் தாக்கம் அதிகரித்த காரணத்தாலையே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொண்டதாகவும், நோயின் தாக்கம் தொடர்பில் மருத்துவர்களே குழம்பிப் போயுள்ளதாகவும், இருப்பினும் மருத்துவர்களால் இதுவரை எந்த உறுதியும் தர முடியவில்லை எனவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers