கோஹ்லியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்! பரபரப்பான மைதானம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்டில், மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர், விராட் கோஹ்லியை முத்தமிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில், இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது. போட்டியின் 15வது ஓவர் முடிந்த நிலையில், ரசிகர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றி விட்டு, மைதானத்திற்குள் எகிறி குதித்து ஓடி வந்தார்.

அவர் கோஹ்லியின் அருகே வந்ததும், அவரை கட்டிப் பிடித்து செல்ஃபி எடுக்க முயற்சித்தார். ஆனால் கோஹ்லி குறித்த ரசிகரிடம் இருந்து தள்ளிப் போக முயன்றபோது, ரசிகர் அவரின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றார்.

இந்நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து ரசிகரை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு ரசிகர்கள் அத்துமீறி மைதானத்தில் நுழைந்து கோஹ்லியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

AFP

AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers