பாலியல் உறவுக்கு முன் அனுமதி பெற வேண்டும்: கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய சட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

சமூக வலைதளத்தில் மீடூ ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பலர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தங்களது விளையாட்டு வீரர்களுக்கு புதிய நெறிமுறை ஒன்றை வகுத்து வெளியிட்டுள்ளது.

மீடூ ஹேஷ்டேக் உலகமெங்கும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதில், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் அதை கிரிக்கெட் சங்கத்தில் தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளது.

முக்கிய முடிவுகள் எடுப்பது என்பது என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. அதுபோலவே பாலியல் உறவில் முடிவு எடுப்பது என்பதும்.

மட்டுமின்றி இதில் அனுமதி பெறுவது என்பதும் முக்கியமானதாகும் என நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்