நீங்க நேசிப்பதை செய்யுங்கள்: இலங்கை வீரர் மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மேத்யூஸ் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமீபகாலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் மோசமாக உள்ள நிலையில் ஆசிய கிண்ணத்தொடரில் அந்த அணி தொடக்க நிலையிலேயே தொடரிலிருந்து வெளியேறியது.

இதனால் அணி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டார்.

இதோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் டுவிட்டரில் தன்னம்பிக்கை அளிக்கும் பதிவுடன் வீடியோவை மேத்யூஸ் வெளியிட்டுள்ளார்.

அதில் துடுப்பாட்ட பயிற்சியில் அவர் ஈடுபடுகிறார்.

பதிவில், நீங்கள் நேசிப்பதை செய்யுங்கள், செய்வதை நேசியுங்கள் எப்போதும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers