இந்திய வீரருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்த கிரிக்கெட் ரசிகர்: நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, பெங்களூருவிலிருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்றுள்ளார்.

இதே விமானத்தில் சோஹினி என்ற ஒரு கிரிக்கெட் ரசிகரும் சென்றுள்ளார்.

விமானத்திலிருந்தபடியே சோஹினி, பெங்களூருவிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானத்தில் அனில் கும்ப்ளேவுடன் சென்று கொண்டிருக்கிறேன். அவரை பார்த்தேன். ஒரு முறை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தலையில் பேண்டேஜுடன் அவர் விளையாடியது நினைவுக்கு வருகிறது. கண் கலங்குகிறது.

கிரிக்கெட் மூலம் பல மறக்க முடியாத நினைவுகளைத் தந்த அனில் கும்பளேவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவரிடம் சென்று பேச பயமாக இருக்கிறது என்று டுவிட்டரில் பதிவிட்டார்.

இதை பார்த்த கும்ப்ளே, தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து, விமானம் புறப்பட்ட பின்னர், என்னிடம் வந்து ஹாய் சொல்லுங்கள் சோஹினி என்று ரிப்ளை கொடுத்தார்.

இதையடுத்து சோஹினி, கும்ப்ளேவிடம் சென்று பேசியிருக்கிறார். அவரின் டிக்கெட்டுக்கு பின் பக்கமும் கும்ப்ளேவிடம் கையொப்பம் வாங்கியுள்ளார்.

கும்ப்ளேவின் இந்த செயல் பலரால் பாராட்டபட்டு வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்