இங்கிலாந்து கிரிக்கெட்டின் வீடு.. ஆனால் இந்தியா தான் கிரிக்கெட்டின் சிகரம்: இங்கிலாந்து வீரர் புகழாரம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜொனாதன் டிராட், இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என்றும், சிகரம் என்றும் புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜொனாதன் டிராட், கடந்த 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணியின் முக்கிய வீரராக இருந்தார்.

ஆஷஸ் தொடர் வெற்றி, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்ற இங்கிலாந்து அணியில் டிராட் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள டிராட் கூறுகையில்,

‘இந்தியாவில் பெற்ற வெற்றி தான் மறக்க முடியாத வெற்றி. முக்கியமாக அப்போதைய அணியில் சேவாக், டெண்டுல்கர், ஹர்பஜன், டோனி உள்ளிட்டோர் இருந்தனர்.

நான் எப்போதுமே இந்தியா தான் உலக கிரிக்கெட்டின் இதயத்துடிப்பு என நினைக்கிறேன். இங்கிலாந்து தான் கிரிக்கெட்டின் வீடு. ஆனால், இந்தியா தான் அதன் உச்சகட்ட சிகரம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தன் ஓய்வுக்கு பின்னர் பயிற்சியாளராக இருக்க விரும்புவதாகவும், தன் அனுபவங்களை இளம் வீரர்களுக்கு அளிக்க விரும்புவதாகவும் டிராட் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்