ஜனாதிபதியிடம் இருந்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெற்றார் விராட்கோஹ்லி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, விளையாட்டு துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை குடியரசுத்தலைவரிடம் இருந்து பெற்றார்.

விளையாட்டு துறையில் நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விளையாட்டு துறையில் சாதித்த வீரர்களுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லிக்கு, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதனை அவருடைய அம்மாவும், மனைவி அனுஷ்கா சர்மாவும் நேரில் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து, பளு தூக்குதல் வீராங்கனையான மீராபாய் சானுவுக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

அதேபோல சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யனுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers