மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய டோனி! ரசிகர்கள் உற்சாகம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து வடிவங்களிலும் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தவர்.

இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

அதன் பின்னர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து வந்தார். ஆனால் அவருடைய வயது முதிர்ச்சியின் காரணமாக 2019-ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடர் குறித்த விமர்சனங்கள் டோனியின் மீது விழ ஆரம்பித்தது.

இதனால் கடந்த 2017-ம் ஆண்டு டோனி தன்னுடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக விராட்கோஹ்லி நியமிக்கப்பட்டார்

டோனியை இனி இந்திய அணியின் கேப்டனாக பார்க்க முடியாத என ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, துபாயில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் டோனி கேப்டனாக இறங்கியுள்ளார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டனாக டோனிக்கு இது 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்