அதிரடி சதத்தால் மிரட்டிய டேவிட் வார்னர்: ஆனாலும் கிண்டலுக்கு ஆளான பரிதாபம்..வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கும் டேவிட் வார்னர் கிளப் கிரிக்கெட் போட்டியில் சதமடித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஓராண்டு சர்வதேச அணிக்காக விளையாட முடியாத நிலையில் உள்ளார்.

ஆனாலும், சில வெளிநாட்டு டி20 தொடர்கள் மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். தற்போது வார்னர் ராண்ட்விக் பீட்டர்ஷாம் கிளப் அணிக்காக ஆடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் சதம் அடித்த அவர், அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். சதம் அடித்த வார்னர் அதை பெரிய சாதனை போல கொண்டாடினார்.

சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அனுபவ வீரரான வார்னர் ஒரு கிளப் போட்டியில் அடித்த சதத்துக்கு இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் செய்வதா என சிலர் அவரை கேலி செய்து வருகிறார்கள்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மெக்கலம், டுவிட்டரில் வார்னரை கிண்டலடித்துள்ளார்.

இந்த கொண்டாட்டம் எவெரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பின் சர் எட்மன்ட் ஹில்லாரியின் செய்த கொண்டாட்டத்திற்கு இணையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்