டோனிக்கு முன்னாடி யாருமில்லை: விராட் கோஹ்லி புகழாரம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, டோனியிடம் இருந்து தான் தலைமைப்பண்பை கற்றுக்கொண்டேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ரோகித்சர்மா தலைமையில் ஆசிய கிண்ணத்திற்கான தொடரில் விளையாடி வருகிறது.

அடுத்து நடைபெற உள்ள மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடருக்காக விராட்கோஹ்லிக்கு தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விராட் கோஹ்லி, தன்னுடைய தலைமை பண்பு மற்றும் 20 ஓவர் போட்டிகளால் ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் பாதிக்கப்படுகிறதா என்பதை பற்றி பேசினார்.

பின்னர் டோனி குறித்து பேசுகையில், என்னுடைய தலைமைப்பண்பிற்கு டோனி மட்டும் தான் காரணம். அதற்கு முன்பு யாருமில்லை. இளம் வயதிலிருந்தே போட்டி குறித்தும், விளையாட்டு குறித்தும் டோனியிடம் கேட்டறிந்துள்ளேன்.

துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதும், எனக்கு பல்வேறு அறிவுரைகளும், ஆலோசனைகளையும் டோனி வழங்கியுள்ளார்.அவருக்கு அருகே மிகநெருக்கமாக நின்று ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்ததால், அவரிடம் இருந்து ஏராளமான விடயங்களை கற்றுக்கொண்டேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers