5 அணித்தலைவர்களை அணுகிய சூதாட்ட தரகர்கள்: ஆசிய கிண்ண நேரத்தில் பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சூதாட்டத் தரகர்கள் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் 5 பேரை அணுகியுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத் தரகர்கள் மீண்டும் தலையிடுவதாகவும், கடந்த 12 மாதங்களில் சர்வதேச அணிகளின் தலைவர்கள் 5 பேரை அவர்கள் அணுகியுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் தலைவர் முகமது ஷாஹத்தை நடப்பு ஆசியக் கிண்ண போட்டியின் போது புக்கிகள் தொடர்புகொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தியதாக அவர் ஐசிசி-யிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி அலெக்ஸ் மார்ஷல் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் 5 பேரை புக்கிகள் தொடர்புகொண்டுள்ளனர். இதில் 4 தலைவர் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.

கடந்தாண்டு மட்டும் ஐசிசி இதுதொடர்பாக 32 விசாரணைகளை நடத்தியுள்ளது.

இதில், 23 சம்பவங்கள், வீரர்கள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டன. 8 சம்பவங்களில் வீரர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 முன்னாள் வீரர்கள் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers