கால்பந்து மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, ரசிகருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஏர் ஆம்புலன்ஸானது அவசரமாக மைதானத்திலே தரையிறக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஆக்வேல் மைதானத்தில் நேற்று மதியம், Barnsley - Burton Albion அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

போட்டியின் இடையில் திடீரென ரசிகர் ஒருவருக்கு உடல்நலனில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் போட்டி சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

ஆனால் நேரம் செல்லச்செல்ல அவருடைய உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, போட்டி ஒத்திவைக்கப்பட்டதோடு, மைதானத்திற்கு நடுவிலே ஏர் ஆம்புலன்ஸ் தரையிறக்கப்பட்டது. பின்னர் அந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களுக்கு போட்டியை விட ஒருவரின் நலன் தான் முக்கியம். அந்த நபர் நிச்சயம் நலம் பெற்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்பாக எங்களால் எந்த தகவலும் வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஒத்துழைப்பு அளித்த இரண்டு கால்பந்து அணிகளுக்கும் தன்னுடைய நன்றியினை அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்