கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் முன்னால் குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா - இங்கிலாந்து போட்டியின் போது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று இந்திய வீரர் ஷிகர் தவான் நடனம் ஆடினார்.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 198 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோது, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

அந்த நேரத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஷிகர் தவானை பங்கரா டான்ஸ் (பஞ்சாபின் பாரம்பரிய ஆட்டம்) ஆடும்படி ரசிகர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து தவான் சூப்பராக நடனமாட, ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.

இது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்