வெளிநாட்டில் தங்கம் வென்ற மகளைப் பார்த்து கதறி அழுத தாய்! வெளியான நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னாவைக் கண்டு அவரது தாயார் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 21 வயதான ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6026 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார். ‌

சவாலாக விளங்கிய சீன வீராங்கனை குயின்லிங்கை விட 64 புள்ளிகள் கூடுலாக பெற்று ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த போட்டியை அவரின் தாய் டிவியில் கண்டுள்ளார். அப்போது மகள் வெற்றிக்கு பின் கண்ணீர் விட்டு அழுது, அருகிலிருக்கும் அம்மன் காலடியில் விழுந்து நன்றி தெரிவித்தது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்