மிரட்டிய முரளிதரன், ஜெயசூர்யா: இதே நாளில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கை அணி செய்த சாதனை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணி கடந்த 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அது நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே கொண்ட தொடர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்களும், இலங்கை 591 ஓட்டங்களும் எடுத்தன.

அடுத்து இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 181 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில், இலங்கை அணி ஐந்து ஓவர்களில் வெற்றி இலக்கான 37 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டில் இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 213 ஓட்டங்களும், அரவிந்த டி சில்வா 152 ஓட்டங்களும் குவித்தனர்.

ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 16 விக்கெட்களை வீழ்த்தி வியக்க வைத்ததோடு ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்