கிரிக்கெட் சூதாட்டம்: இலங்கை அணி முன்னாள் தலைவரிடம் விசாரணை.. இருவர் கைது

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆட்ட நிர்ணய சதி முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் செல்போன்களை கைப்பற்றியுள்ளனர்.

இதே நேரத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பட்டுச்சபையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் அடிப்படையில் இரு இந்தியர்களை கைது செய்துள்ளனர்.

இரு இந்தியவர்கள் குறித்து எங்களுக்கு சந்தேகம் ஏழுந்ததால் அவர்களை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம் என இலங்கை கிரிக்கெட் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறான ஒரு போட்டியின் போது சந்தேகத்தின் இடமான முறையில் செயற்பட்ட இந்தியர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்