கேரள மக்களுக்காக ரொனால்டோ இத்தனை கோடியா கொடுத்துள்ளார்? வெளிவராத தகவல்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரொனால்டோ 77 கோடி ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம், தற்போது அம்மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, நெய்மர், ரொனால்டோ போன்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில சில ரசிகர்கள் அவர்களுக்கு அருகே நின்றபடியும் புகைப்படங்கள் வெளியாகின.

இப்படி கேரளாவில் அதிக கால்பந்தாட்ட ரசிககர்கள் உள்ளதால், அவர்களில் சிலர் கால்பந்து ஜாம்பவனான கிறிஸ்டியன் ரொனால்டோவுக்கு, கேரளா கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உங்கள் முடிந்த உதவியை செய்யுங்கள் சார் என்று அவருடைய டுவிட்டர் அக்கவுண்டிற்கு டேக் செய்திருந்தனர்.

இதையடுத்து ரொனால்டோ எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் கேரள மக்களுக்காக 77 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளதாக இணையவாசிகள் சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே சமயம் அவர் கேரளாவிற்கு உதவியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாவதால், அவர் ஏன் இதுவரை இது குறித்து பதில் அளிக்காமல் இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி பிரபல நடிகையான சன்னி லியோன் கூட 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின, அவரும் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்