ஹொட்டலில் இளம்பெண்களுடன் உல்லாசம்! வசமாக மாட்டிக் கொண்ட பிரபல வீரர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பாலியல் புகாரில் சிக்கியதால், ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து 4 ஜப்பான் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்தோனேசியாவின் ஜகார்தா மற்றும் தலைபாங் ஆகிய பகுதிகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கலந்து கொண்ட ஜப்பான் கூடைப்பந்தாட்ட அணி தொடக்க ஆட்டத்தில் கத்தார் அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து, ஜப்பான் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

அப்போது அணியை சேர்ந்த 4 வீரர்கள் தாங்கள் அணிந்திருந்த ஜெர்சியுடனேயே, ஹொட்டலுக்கு சென்று மது அருந்தியதோடு 4 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட 4 வீரர்களும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ஜப்பான் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணை முடிந்த பின்னர், நால்வருக்குமான தண்டனை அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Jun Hirata/Kyodo/AP

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்