சத்தமே இல்லாமல் கேரளாவிற்கு உதவி செய்த சச்சின் டெண்டுல்கர்! எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு, திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், சிறுவர் சிறுமியர் போன்றோர் தங்களால் முயன்ற அளவிற்கு உதவி செய்து வருகின்றனர்.

இதில் இந்திய அணி வீரரான யுவராஜ் சிங், கேரளாவிற்கு உதவி செய்யும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதைப் பற்றி எந்த ஒரு விளம்பரமும் சச்சின் செய்து கொள்ளவில்லை. இதே போன்று அவர் பலருக்கு சத்தமே இல்லாமல் உதவு செய்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்